“அட்சய திருதியைக்கு ஆன்லைனில் தங்கம் வாங்கலாம்”.. நகைக்கடைகளின் அறிவிப்பை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

 

“அட்சய திருதியைக்கு ஆன்லைனில் தங்கம் வாங்கலாம்”.. நகைக்கடைகளின் அறிவிப்பை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

ஊரடங்கால் அனைத்து வணிகமும் முடங்கியுள்ளதை போல, நகைக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல  முடியமால் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்த படியே வேலை செய்ய வைத்து வருகின்றன. ஆனால் இந்த ஊரடங்கினால் ஆதரவற்றோர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் அனைத்து வணிகமும் முடங்கியுள்ளதை போல, நகைக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தங்க விலை தாறு மாறாக உயர்ந்து வருகிறது. 

ttn

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமை அட்சய திருதியையை முன்னிட்டு ஆன்லைனில் தங்கம் வாங்கலாம் என்று முன்னணி நகைக்கடைகள் அறிவித்துள்ளன. வழக்கமாக சித்திரை அமாவாசை முடிந்த 3 ஆவது திதியை ஆட்சியை திருதியை ஆக கருதப்படும். அதன் படி, இந்த ஆண்டு வரும் 26 ஆம் தேதி அட்சய திருதியை  வருகிறது. அந்த நன்னாளில் ஒரு சிறிய தங்கம் வாங்கினால் நல்லது என்று ஆண்டாண்டு காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு அட்சய திருதியை ஊரடங்கில் வருவதால் மக்கள் யாராலும் நகைக்கடைகளுக்கு செல்ல இயலாது. அதனால் மக்கள் ஆன்லைன் மூலம் நகை வாங்கலாம் என்று முன்னணி நகைக்கடைகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளன. 

ttn

அதாவது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய பிறகு கூப்பன்கள் வழங்கப்படும் என்றும் ஊரடங்கு முடிந்த பின்னர், வாடிக்கையாளர்கள் நகைக்கடைகளுக்கு சென்று நகையை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பரவிய நிலையில் நெட்டிசன்கள், “எதை கொண்டு அடிச்சாலும் இவங்க திருந்த மாட்டாங்க” என்று விமர்சித்து வருகின்றனர். ஊரடங்கால் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது நெட்டிசன்களிடையே பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.