அடையாள அட்டைகளை காட்டியும் செவிலியர்களுக்கு அபராதம் விதித்த போலீசார்!

 

அடையாள அட்டைகளை காட்டியும் செவிலியர்களுக்கு அபராதம் விதித்த போலீசார்!

மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மருத்துவ பணிக்கு சென்று திரும்பிய மருத்துவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் நடந்துள்ளது. 

ttn

மதுரையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியை முடித்து விட்டு செவிலியர்கள் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது மாட்டுத்தாவணி அருகே அந்த ஆட்டோவை மடக்கிய போலீசார், அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். அவர்கள் தாங்கள், செவிலியர்கள் என்று அடையாள அட்டையை காட்டியும் அபராதத்தை செலுத்திய பின்னரே ஆட்டோவை செல்ல விட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரையில் பணியாற்றும் காவலர்கள் மருத்துவ பணிக்கு செல்பவர்களை கூட அனுமதிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.