“அடேய்…இது யாரு பாத்த வேலைன்னு தெரில”… ‘தளபதி 65’ அப்டேட் பார்த்து அதிர்ச்சியடைந்த ‘கோப்ரா’ பட இயக்குனர்!

 

“அடேய்…இது யாரு பாத்த வேலைன்னு தெரில”… ‘தளபதி 65’ அப்டேட் பார்த்து அதிர்ச்சியடைந்த ‘கோப்ரா’ பட இயக்குனர்!

இயக்குனர் அஜய் ஞானமுத்து விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரண்டு சிறந்த திரில்லர் படங்களைக் கொடுத்தவர். தற்போது கோப்ரா படத்திலும் விக்ரமின் கெட்டப்-களைப் பார்த்து படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இயக்குனர் அஜய் ஞானமுத்து விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரண்டு சிறந்த திரில்லர் படங்களைக் கொடுத்தவர். தற்போது கோப்ரா படத்திலும் விக்ரமின் கெட்டப்-களைப் பார்த்து படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

ajay-film

தற்போது அஜய் ஞானமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது விக்கிப்பீடியா பக்கத்தின் ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார். அதில் அவரைப் பற்றிய தகவல்களுடன் இறுதியாக, தளபதி 65 படத்தை இயக்கப்போகிறார் எனவும் இருக்கிறது. இதை அறிந்த ஞானமுத்து “அடேய்… இது யார் பார்த்த வேலைன்னு தெரில” என பதிவிட்டுள்ளார். விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் எடிட் செய்ய முடியும். ஆனால் நாம் எடிட் செய்ததை ரீவியூ செய்த பின்னர் வெளியிடுவர். அதே போல் யாரோ ஒருவர் ஞானமுத்து ‘தளபதி 65’ படத்தை இயக்கப்போகிறார் என்று எடிட் செய்திருக்கிறார்கள். 
யாரா இருக்கும்…?