அடேங்கப்பா! 4, 375 இடங்களில் அறிமுகமாகும் ஸ்மார்ட் பார்க்கிங்! டிராஃபிக் பிரச்சனையே இனி இருக்காது!

அடேங்கப்பா! 4, 375 இடங்களில் அறிமுகமாகும் ஸ்மார்ட் பார்க்கிங்! டிராஃபிக் பிரச்சனையே இனி இருக்காது!

ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால், சராசரியாக மூன்று கார்களை வைத்திருக்கிறார்கள். மகன், மனைவி, கணவர் என்று தனித்தனியே அலுவலகம் செல்கிறார்கள். சேர்ந்து குடும்பத்தோடு செல்வதற்கென தனியாக இன்னொரு கார். ஆனா இந்த மூன்று கார்களையும் பார்க்கிங் செய்வதற்கு இடமில்லாமல் மூன்று கார்களுமே இரவு நேரங்களில் தெருவோரத்தில் தான் நிறுத்தப்படுகிறது. இன்றும் சென்னையில் தெருவோரங்களில் வரிசைக்கட்டி நிற்கும் கார்களை பாரபட்சமில்லாமல் எல்லா ஏரியாக்களிலுமே பார்க்கலாம். 

cars

சென்னையில் மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும், ஒருத்தர் மட்டுமே ஓட்டிச் செல்லும் கார்கள் எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தி நகர், புரசைவாக்கம், சவுக்கார்பேட்டை, நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் பகல் நேரங்களில் கார்கள் பார்க்கிங் செய்ய இடம் தேடி அலைவதாலும், முறையாக பார்க்கிங் செய்யாததாலும் பல நேரங்களில் இந்த இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிவிடுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சியும் எஸ்.எஸ்.டெக் நிறுவனமும் இணைந்து ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டத்தை செயல்படுத்தவுள்ளது. 
முதற்கட்டமாக தி.நகர், வாலாஜா சாலை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், பெசண்ட் நகர், அண்ணா நகர், அம்பத்தூர் என 4 ஆயிரத்து 375 கார்களை நிறுத்தும் இடங்களை இதற்காக தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.

smart parking

இந்த இடங்களில் பார்க்கிங் செய்ய ஆன் லைன் மூலமாக புக் செய்ய வேண்டும். வாகனங்களை பார்க்கிங் செய்யும் இடம் ழுழுவதும் சி.சி.டி.வி.கேமிராக்கள் கொண்டு கண்காணிக்கப்படும். கார்களை பார்க்கிங் செய்ய குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கப்படவுள்ளது. இருச்சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது.  தொடர்ந்து படிப்படியாக பெரு நகர சென்னை மாநகராட்சி பகுதிகள் முழுவதிலும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.