அடேங்கப்பா.. ரவிசாஸ்திரியின் சம்பளம் இத்தனை கோடிகளா? வாய்பிளக்கும் ரசிகர்கள்!

அடேங்கப்பா.. ரவிசாஸ்திரியின் சம்பளம் இத்தனை கோடிகளா? வாய்பிளக்கும் ரசிகர்கள்!

முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். ஏற்கெனவே இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஓராண்டுக்கான சம்பளம் ரூ. 8 கோடியாக இருத்தது. இந்நிலையில் இவரது பதவி மீண்டும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ரவி சாஸ்திரியின் தற்போதைய சம்பளம் 20% உயர்ந்து ரூ. 9.5 கோடி முதல் 10 கோடி வரை ஓராண்டு வீதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் இணைந்து  பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணும், பீல்டிங் பயிற்சியாளராக ஆர். ஸ்ரீதரும்  அவர்கள் பணியை தொடர்ந்து செய்யவுள்ளனர். அவர்களுக்கு சம்பள உயர்வாக ரூ.3.5 கோடி வீதம் ஓராண்டு  வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 

ravi shashtri

விக்ரம் ராத்தோரிற்கு அடுத்து கிரிக்கெட் பேட்டிங்  பயிற்சியாளராக வந்த சஞ்சய் பங்காரின் சம்பளம் ஆரம்ப நிலையில் ரூ.2.5 கோடி முதல் 3 கோடி வரை வழங்கப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான ஐ.சி.சி. உலகக்கோப்பை-2019 போட்டியில் தோனியை 7ஆவது நபராக பேட்டிங் செய்ய தேர்வுச் செய்ததால் இந்தியா இழக்க நேர்ந்தது எனக் கூறி பங்காரை வெளியேறச் செய்தது கிரிக்கெட் சங்கம்.  முன்னதாக கிரிக்கெட் ஆலோசனைக்கு குழுவின் தலைவர் மற்றும்  உலகக் கோப்பை வென்ற அணியின் தலைவரும் ஆன கபில் தேவ் அவர்கள் சாஸ்திரியை தலைமை பயிற்சியளராக அறிவித்தார். 

ravi shastri

இந்தியா ஏற்கனவே நடந்த மெய்டன் சீரிஸில் வெற்றி மற்றும் 2019 உலகக் கோப்பையில் இவரது தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக அரை இறுதி வரை முன்னேறியது. இந்நிலையில் 2021ல் நடக்கவிருக்கும் டி-20 உலகக் கோப்பைக்கு சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப் பட்டுள்ளது.சென்ற உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதி வரையில் இந்திய அணி முன்னேறி இருந்தாலும், ரவி சாஸ்திரி, வீரர்களுடன் சேர்ந்து இரவு விருந்துகளிலும், கேளிக்கைகளிலும் ஈடுபட்டதால் தான் வீரர்களால் அரையிறுதி போட்டிகளில் சரியாக விளையாட இயலவில்லை என்கிற விமர்சனத்தையும் கிரிக்கெட் ரசிகர்கள் முன்வைக்கிறார்கள். இந்நிலையில், ரவிசாஸ்திரிக்கு இத்தனை கோடிகளில் சம்பளமா என்று அதிர்ச்சியடைகிறார்கள்!