அடேங்கப்பா! சென்னையில் மட்டும் 2,642 விநாயகர் சிலைகள்! நாளை கடலில் கரைக்கப்படுகின்றன!

 

அடேங்கப்பா! சென்னையில் மட்டும் 2,642 விநாயகர் சிலைகள்! நாளை கடலில் கரைக்கப்படுகின்றன!

விநாயகர் சதுர்த்தி கடந்த 2ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் தமிழகம் முழுவதும் பலவித வடிவங்களில் 25 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சென்னையில் மட்டும் இரண்டாயிரத்து 642 சிலைகள் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி கடந்த 2ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் தமிழகம் முழுவதும் பலவித வடிவங்களில் 25 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சென்னையில் மட்டும் இரண்டாயிரத்து 642 சிலைகள் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராசாயனங்களைப் பயன்படுத்தாமல் சிலைகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.

vinayagar statue

கடந்த 5ம் தேதி சிறுசிறு விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட நிலையில், இன்றும், நாளையும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர், பெரியார் நகர், காசிமேடு, பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய ஆறு இடங்களில் பிள்ளையார் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

vinayagar statue

இதில் பட்டினப்பாக்கத்தில் மட்டும் ஆயிரத்து 600 சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இதற்காக ராட்சத கிரேன் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. சிலைகள் கரைக்கும் இடத்தில் கண்காணிப்பு கோபுரம், மருத்துவ குழு, உயிர் காக்கும் குழு மட்டுமல்லாது அங்கு வருகை தரும் பக்தர்களுக்கு கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது.