அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னை வானிலை ஆய்வு மையம்

 

அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: தென் கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற வாய்ப்புள்ளது.  அதன் பின்னரே தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு குறித்து கூற முடியும்.

குமரிக் கடல் மற்றும் வடக்கு கேரள கரை வரை நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாலும், கிழக்கு திசைக்காற்றின் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கட்டு மற்றும் ஈரோடு சத்யமங்கலம் உள்ளிட்ட இடங்களில் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என கூறியுள்ளது.