அடுத்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்தை கடக்கவிருக்கும் கொரோனா பலி எண்ணிக்கை

 

அடுத்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்தை கடக்கவிருக்கும் கொரோனா பலி எண்ணிக்கை

உலகளவில் அடுத்த 24 மணி நேரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை கடக்கவுள்ளது.

வாஷிங்டன்: உலகளவில் அடுத்த 24 மணி நேரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை கடக்கவுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். ஆகவே அடுத்த 24 மணி நேரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை கடக்கவுள்ளது. மொத்தம் இதுவரை 16 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஸ்பெயின் கொரோனா பலி எண்ணிக்கை இத்தாலியின் எண்ணிக்கைக்கு அருகில் முன்னேறி வருகிறது.

ttn

கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 1660-களின் நடுப்பகுதியில் நிகழ்ந்த லண்டனின் பெரிய பிளேக் நோயுடன் ஒப்பிடப்படுகிறது. அந்த நோயால் ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இது அந்த நேரத்தில் நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ஸ்பானிஷ் காய்ச்சல் மூலம் 1918 முதல் 1920 வரை 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.