அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

 

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இருக்கும் வெப்பத்தை எப்படித் தாங்கப் போகிறோமோ என்று மக்கள் பெரும் கவலையுடன் இருந்தனர்.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பம் ஒரு காட்டம் காட்டி வருகிறது. இந்த வெப்பத்தையே மக்கள் தாங்க முடியாமல் இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இருக்கும் வெப்பத்தை எப்படித் தாங்கப் போகிறோமோ என்று மக்கள் பெரும் கவலையுடன் இருந்தனர். குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதமே வெயில் அடிக்க தொடங்கி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தீப்பிடித்தது. 

ttn

இதனையடுத்து குமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த படி, நேற்று குமரியின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில்  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  திண்டுக்கல், சேலம், மதுரை, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பம் குறையும் என்றும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.