அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

 

அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வங்க  கடலில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகவுள்ள  நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில்  14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

வங்க  கடலில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகவுள்ள  நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்  என்று அறிவித்துள்ளது. 

maha

அரபிக்கடலில் மஹா  புயல்   வடமேற்கு திசையில்  நகர்ந்து நாளை அதிதீவிர புயலாக மாறும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மினிக்காய் தீவுகள், லட்சத்தீவுகள், லட்சத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.