அடுத்த 21 நாட்களுக்கு கல்வி நிறுவனங்கள் இயங்காது: பச்சை மண்டலங்களில் பேருந்து சேவை!

 

அடுத்த 21 நாட்களுக்கு கல்வி நிறுவனங்கள் இயங்காது: பச்சை மண்டலங்களில் பேருந்து சேவை!

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது சிவப்பு மண்டலங்களில் இங்கு பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.  விமானம், ரயில், மெட்ரோ மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்த 21 நாட்களுக்கு இயங்காது என்றும்  மக்கள் அதிகமாகக்கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. 

பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களில் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை இயக்கப்படவுள்ளது. 
பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்க அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை உள்ளிட்ட 12 சிவப்பு மண்டலங்கள், 24 ஆரஞ்சு, 1 பச்சை மண்டலங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லாததால் அந்த மாவட்டம் மட்டும் பச்சை நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.