அடுத்த 2 நாட்களுக்குக் கனமழை…எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா !

 

அடுத்த 2 நாட்களுக்குக் கனமழை…எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா !

சென்னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்தது. நாளை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 14 ஆம் தேதி கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

ttn

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். சென்னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவித்தார். மேலும், சென்னையில் வடகிழக்கு பருவமழை 14 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்றும் தெரிவித்தார்.