அடுத்த 18 மாசத்துல ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கடனே இருக்காது…. சொன்னாங்க நம்புங்க! சொன்னது முகேஷ் அம்பானிங்க

 

அடுத்த 18 மாசத்துல ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கடனே இருக்காது…. சொன்னாங்க நம்புங்க! சொன்னது முகேஷ் அம்பானிங்க

அடுத்த 18 மாதங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடன் இல்லா நிறுவனமாக மாறிவிடும் என அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உறுதிபட கூறினார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அந்நிறுவனத்தின தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ ஜிகா பைபர் திட்டம் செப்டம்பர் 5ம் தேதி முதல் வர்த்தக ரீதியாக செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் (2021 மார்ச்சுக்குள்) நிகர கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுக்கும். மேலும், அதற்காக மேற்கொள்ள இருக்கும் செயல்கள் குறித்து புதிய வர்த்தக பார்ட்னர்கள் பங்கு பெற போகிற தகவலையும் தெரிவித்தார்.

ஜியோஜிகா பைபர்

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.1.54 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறினார். ஆனால், முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கு ரூ.4.61 லட்சம் கோடி கடன் இருப்பதாக வெளிநாட்டு தரகு நிறுவனமான கிரெடிட் சூயிஸ் கூறுவது குறிப்பிடத்தக்கது. 

 

கடன்

ஜியோ பைபர் திட்டம் அமல் மற்றும் கடன் இல்லாத நிறுவனம் போன்ற முகேஷ் அம்பானியின் அறிவிப்பால் இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை 11 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.