அடுத்த வீடியோவை வெளியிட்ட திரெளபதி டீம்… மன உளைச்சலில் அஜித்தின் மச்சான்..!

 

அடுத்த வீடியோவை வெளியிட்ட  திரெளபதி டீம்… மன உளைச்சலில் அஜித்தின் மச்சான்..!

அந்த வீடியோவில் அஜித் மச்சான் ரிச்சர்ட் மன உளைச்சலில் இருப்பதைப்போலவும், அவரை தேற்றுவதை போலவும் பாடலை அமைத்துள்ளனர்.

திரெளபதி ஒரு குறிப்பிட்ட சாதியினர், மற்றொரு சாதியினரின் பெண்களை நாடகக் காதலால் ஏமாற்றி, கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டி, அதன்மூலம் பணம் பறிப்பதாகவும், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப்படத்தை எடுத்துள்ளதாகவும் கூறுகிறார் இயக்குநர் மோகன். ட்ரெய்லரில் வரும் வசனங்களும் பரபரப்பை கிளப்பின. Mohan

வீடியோ எல்லாம் வேண்டாம்ணே… எங்கப்பாவுக்கு தெரிஞ்சா உயிரையே விட்டுடுவாரு என ஒரு பெண் கதற, ’நீ ஓடி வரும்போதே உங்க அப்பன் அங்க உசுர விட்டிருப்பான்’என மிரட்டுகிறார் ஒருவன். அடங்குனா அடங்கக்கூடாதுனு எங்கண்ணே சொல்லிருக்காப்ல. பெரிய வீட்டு பொண்ணுங்கள கல்யாணம் பண்ணினால் தான் கெத்துனு எங்கண்ணே சொல்லிருக்கிறாப்ல’’என பேசும் வசனம் நிஜத்தில் அரசியல் கட்சி தலைவர் ஒருவரை குறிப்பதாக இருக்கிறது.

அம்மணம் பொண்ணுங்களுக்கு மட்டும் தான் அவமானமா? ஏன் உனக்கில்ல என பெண்கள் பேசும் வசனம்  சாட்டையடியாய் இருக்கிறது. விவசாய தற்கொலை, கடன் தற்கொலை என செத்தவன் பாதிப்பேர் பொண்ணை பெத்தவர்தாண்டா என வரும் வசனம் உலுக்கி எடுக்கிறது. அவங்க ஊருக்குள்ள நாம கால வைக்கணும்னா அவங்க வீட்டு பொண்ணு மேல நாம கையை வைச்சே ஆகணும் என வில்லன் பேசும் வசனத்தில் சூழ்ச்சியின் வெறித்தன வெளிப்படுகிறது.draupathy

எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டும் முக்கியம்… மீறி கைய வச்ச கைய வெட்டுவோம்… நாயகி பேசும் வசனத்தில் மானமும் வீரமும் தெறிக்கிறது. இந்தப்படத்தின் டிரெய்லரை ஒருசாரர் கொண்டாடி வரும் நிலையில் மற்றொரு தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. வழக்குகளும் பதிவாகியுள்ளது. ஆனாலும் அசராமல் அடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறது திரெளபதி டீம். அந்த வீடியோவில் அஜித் மச்சான் ரிச்சர்ட் மன உளைச்சலில் இருப்பதைப்போலவும், அவரை தேற்றுவதை போலவும் பாடலை அமைத்துள்ளனர்.