அடுத்த விக்கெட்… பாரத் பெட்ரோலியத்தை சூறையாடும் பாஜக அரசு!

அடுத்த விக்கெட்… பாரத் பெட்ரோலியத்தை சூறையாடும் பாஜக அரசு!

பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்பரேட்களுக்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் முயற்சிகள் என பல்வேறு செயல்களை முனைப்புடன் செய்து வருகிறது.

மேலும் கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக ரயில்வே துறை மற்றும் அதன் அச்சகம் போன்றவற்றைத் தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்திலேயே துணிந்து அறிவித்துள்ளது பா.ஜ.க அரசு. இதற்கு வரும் எதிர்ப்புகளை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் எதேச்சதிகாரப் போக்குடன் பா.ஜ.க அரசு செயல்படுகிறது எனப் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

bharat petroleum

இந்நிலையில், நாட்டின் 2-வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் உள்ளது. நாட்டில் நுகரப்படும் மொத்த பெட்ரோலிய பொருட்களில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 21 சதவிகித பங்கைக் கொண்டிருக்கிறது. லாபத்தில் இயங்கி வரும் இந்த மாபெரும் நிறுவனத்தை தனியார்மயமாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.