அடுத்த வருஷம் எல்லா சரியா வந்துரும்… கவலைபடாதீங்க- கீதா கோபிநாத்

 

அடுத்த வருஷம் எல்லா சரியா வந்துரும்… கவலைபடாதீங்க- கீதா கோபிநாத்

2020ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் 7 சதவீதத்தை தொட்டு விடும் என பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத். கடந்த ஜனவரி மாதத்தில் பன்னாட்டு நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணராக பொறுப்பேற்றார். பன்னாட்டு நிதியத்தின் முதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் பெருமை கீதா கோபிநாத்துக்கு உண்டு. தனது சிறப்பான செயல்பாடுகளால் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

பன்னாட்டு நிதியம்

பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் சமீபத்தில் முன்னணி செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்து இருந்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த ஆண்டு இந்தியா பல முனைகளில் பாதிக்கப்பட்டது. இந்த மந்தநிலையை நாங்கள் சுழற்சி சரிவு என்று கருதுகிறோம். அதனால்தான் 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை 6.1 சதவீதமாக குறைத்தோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

ஆனாலும் 2020ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் 7 சதவீதத்தை எட்டும். நிறுவன வரி குறைப்பு மற்றும் சமீபத்திய கொள்கைகள் கிராமப்புற வருவாய் வளர்ச்சிக்கு உதவும், இவை அனைத்தும் பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து மீள உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.