அடுத்த வருசம் கெத்து காட்டுவோம்; சேன் வாட்சன் நம்பிக்கை !!

 

அடுத்த வருசம் கெத்து காட்டுவோம்; சேன் வாட்சன் நம்பிக்கை !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தனக்கும் ஆதரவு அளித்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சேன் வாட்சன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

shane watson

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தனக்கும் ஆதரவு அளித்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சேன் வாட்சன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டியில் ரத்தம் சிந்தி சென்னை அணிக்காக தனி ஒருவனாக போராடியதன் மூலம் சென்னை ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டையும் பெற்ற சேன் வாட்சன் இரு தினங்களுக்கு முன்பே நாடு திரும்பிவிட்டார். 

tweet

சேன் வாட்சனை பற்றியும், இறுதி போட்டியை பற்றியும் சென்னை ரசிகர்கள் இன்று வரை பேசி வரும் நிலையில், தற்பொழுது சேன் வாட்சன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றையும் சென்னை ரசிகர்கள் காட்டுத்தீயாக பரப்பி வருகின்றனர். 
சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ள வீடியோவில், அடுத்த வருடம் இன்னும் கூடுதல் பலத்துடன் திரும்பி வருவோம்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.