அடுத்த மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்பட மாட்டாது!

 

அடுத்த மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்பட மாட்டாது!

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் ஏழை, எளிய கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு  இ.எம்.ஐ வசூலிக்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் தெரிவித்தது. 

tt

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன், அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படாது என்று கூறினார். மேலும், இது தொடர்பான அனைத்து விவரங்களும் அந்தந்த வங்கிகளின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் அதனை பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.