அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல் !

 

அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல் !

வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், சென்னையில் கன மழை பெய்யும் என்றும் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று வீசும் என்று தெரிவித்திருந்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், சென்னையில் கன மழை பெய்யும் என்றும் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று வீசும் என்று தெரிவித்திருந்தார். அதே போல, நேற்று இரவு முதல் சென்னை முழுவதுமாக கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், கோவை, தஞ்சாவூர், தென்காசி, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.  

ttn

இந்நிலையில், கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத் தீவு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு  நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.