அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

 

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு  கன மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு  கன மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல் கடந்த 15-ம் தேதி நள்ளிரவு அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயலின் கோர தாண்டவத்தால் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில்  சென்னை வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,   ‘நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு  தமிழகத்தில் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை 19-ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பொழியும் என்றும் நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பொழியும்.சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழியும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.