அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் மஹாராஷ்ட்ராவில் அமித் ஷா ஆலோசனை!

 

அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் மஹாராஷ்ட்ராவில் அமித் ஷா ஆலோசனை!

பாஜக சிவசேனா இருகட்சிகளிடையே பிணக்கு இருந்தாலும், காலையில் ஊடலும் மாலையில் கூடலுமாக இருக்கும் கணவன் மனைவி உறவு போன்றது. எப்படியும் தேர்தல் கூட்டணிக்கு வருவார்கள், அல்லது தேர்தல் முடிந்தவுடன் கூட்டணிக்கு வரவைக்கப்படுவார்கள் என்பதால், அமித் ஷா அவர்களை சீந்தாமல் போயிருக்கலாம்.

288 உறுப்பினர்களைக் கொண்ட மஹாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக சிவசேனா கூட்டணி அரசில், பாஜக மட்டுமே கடந்த தேர்தலில் 121 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. அம்மாநிலத்தில் அக்கட்சி பெற்ற அதிகபட்ச வெற்றி அதுதான். தேர்தலுக்கு முன்பு முறுக்கிக்கொண்டு தனியாக தேர்தலை சந்தித்த சிவசேனா, முடிவுகளுக்குப் பின் பாஜகவோடு கூட்டணி அரசில் இணைந்தது. இந்நிலையில் தேர்தல் விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக மும்பைக்கு வந்திருந்த அமித் ஷா, முதல்வர் ஃபட்னாவிஸ் உள்ளிட்ட சொந்த கட்சிக்காரர்களை மட்டும் சந்தித்துப் பேசினார். கூட்டணியின் முக்கிய அங்கத்தினரும், இடைவிடாத இம்சையுமான சிவசேனா தலைவர்களை சந்திக்கவில்லை.

Amit Shah ready for Maharashtra

பாஜக சிவசேனா இருகட்சிகளிடையே பிணக்கு இருந்தாலும், காலையில் ஊடலும் மாலையில் கூடலுமாக இருக்கும் கணவன் மனைவி உறவு போன்றது. எப்படியும் தேர்தல் கூட்டணிக்கு வருவார்கள், அல்லது தேர்தல் முடிந்தவுடன் கூட்டணிக்கு வரவைக்கப்படுவார்கள் என்பதால், அமித் ஷா அவர்களை சீந்தாமல் போயிருக்கலாம். இது ஒருபக்கம் இருக்க, அமித் ஷாவுக்கு கைவந்த கலையான மாற்றான் தோட்டத்து மல்லிகையை பறிக்கும் வேலையும் ஜரூராக நடந்துவருகிறது. வழக்கமாக காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்கள்தான் தேர்தலுக்குப் பிறகு கட்சி மாறுவார்கள். ஆனால், மஹாராஷ்ட்ராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பாஜகவுக்கும், சிவசேனாவுக்குமாக ஜம்ப்பாகி கொண்டிருக்கிறார்கள். மஹாராஷ்ட்ர முடிவு இன்னும் ஒரே மாதத்தில்!