அடுத்த மாதம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?

 

அடுத்த மாதம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?

தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேகதாது பிரச்னை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியது. அந்த கூட்டத்தில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் அடுத்த மாதம் கூட இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சட்டப்பேரவை கூட்டத்தில்  திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை, கஜா புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். 

எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அரசு தரப்பில் முதல்வரும், அமைச்சர்களும் பதிலளிப்பார்கள் என்பதால் 2019-ம் ஆண்டு நடைபெறும் முதல் கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.