அடுத்த மாசம் 11 நாட்களுக்கு வங்கி விடுமுறை! இப்பவே திட்டமிடுங்க!

 

அடுத்த மாசம் 11 நாட்களுக்கு வங்கி விடுமுறை! இப்பவே திட்டமிடுங்க!

நாளை அக்டோபர் மாதம் துவங்கவுள்ள நிலையில், அக்டோபர் மாதத்தில் 11 தினங்களுக்கு வங்கிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை நாட்களாக இருக்கின்றன என்கிற தகவலால் பொதுமக்கள் இப்போதே அதிர்ச்சியடைய துவங்கியுள்ளனர். ஏற்கெனவே பல வங்கிகளும், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு கட்டணங்களை வசூலித்து வரும் நிலையில், எஸ்.பி.ஐ வங்கியும், தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு கட்டணங்களை அறிவித்துள்ளது.

நாளை அக்டோபர் மாதம் துவங்கவுள்ள நிலையில், அக்டோபர் மாதத்தில் 11 தினங்களுக்கு வங்கிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை நாட்களாக இருக்கின்றன என்கிற தகவலால் பொதுமக்கள் இப்போதே அதிர்ச்சியடைய துவங்கியுள்ளனர். ஏற்கெனவே பல வங்கிகளும், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு கட்டணங்களை வசூலித்து வரும் நிலையில், எஸ்.பி.ஐ வங்கியும், தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு கட்டணங்களை அறிவித்துள்ளது. தனியார் வங்கியான ஐசிஐசிஐ, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் செலுத்துவதற்கும் கட்டண தொகையை அறிவித்துள்ளது. 

bank

இந்நிலையில், பண்டிகை தினங்களும், தேசிய விடுமுறை தினங்களும் வருவதால், வரும் அக்டோபர் மாதத்தில் 11 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள பொது விடுமுறை தினங்களின் பட்டியலின் படி,  வரும் அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 11 தினங்கள் விடுமுறையாக வருகின்றன. அக்டோபர் மாதத்தில் 20 தினங்களில் மட்டும் தான் வங்கிகள் செயல்படும். அக்டோபர் 2ம் தேதி காந்திஜெயந்தி, 6,7,8 தேதிகளில், ஞாயிறு, ராம நவமி, துஷரா விடுமுறை தினங்கள், 12,13 தேதிகளில் இரண்டாவது சனி, ஞாயிறு கிழமைகளுக்கான விடுமுறை, 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 26,27ம் தேதிகளில் தீபாவளி பண்டிகை, நான்காவது சனிக்கிழமை என்று தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருகின்றன. வாடிக்கையாளர்கள் வங்கிகளின் விடுமுறை தினங்களுக்கேற்ப தங்களது பண பரிவர்த்தனையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!