அடுத்த படமும் இப்படி தான்… ‘திரௌபதி’ இயக்குநர் மோகன் ஜி அறிவிப்பு!

 

அடுத்த படமும் இப்படி தான்… ‘திரௌபதி’ இயக்குநர் மோகன் ஜி அறிவிப்பு!

பாரதி உட்பட பலர்  நடித்துள்ளனர். இந்த படம் நாடக காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் சமீபத்தில் வெளியாகி ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. 

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”. இப்படத்தில் நடிகை ஷாலினியின்  சகோதரர்  ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில்  நடிகர் கருணாஸ், ஜீவா ரவி,  பாரதி உட்பட பலர்  நடித்துள்ளனர். இந்த படம் நாடக காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் சமீபத்தில் வெளியாகி ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. 

ttn

இப்படத்தை குடும்பத்துடன் கண்டுரசித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பெண் குழந்தைகளை  வைத்திருக்கும் ஒவ்வொருவரும் காண வேண்டிய திரைப்படம் என பாராட்டினார். அதே சமயம், இப்படத்தின் இயக்குநர்  மோகன் ஜி, திரௌபதி படத்தை காண வருமாறு இயக்குநர்  பா.ரஞ்சித்துக்கு டிவிட்டரில் அழைப்பு விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் இயக்குநர்  மோகன் ஜி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ திரெளபதின்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது.. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான்.. விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்..’ என்று  பதிவிட்டுள்ளார்.