அடுத்த படத்திலும் அட்லீ கேன்சல்… வெற்றி மாறனிடம் கதை கேட்ட விஜய்?!

 

அடுத்த படத்திலும் அட்லீ கேன்சல்… வெற்றி மாறனிடம் கதை கேட்ட  விஜய்?!

கதையை ஆலோசித்ததாகவும், அது குறித்து  தகவல்  விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

நடிகர் விஜய் பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறது.  

ttn

இந்நிலையில் விஜய்  தனது அடுத்த  படத்தில் வெற்றிமாறனுடன் இணைய இருப்பதாகத் தகவல்  வெளியாகியுள்ளது. சென்னையில் நடிகர் விஜய்யை சந்தித்து  கதையை ஆலோசித்ததாகவும், அது குறித்து  தகவல்  விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 
 

ttn

 இயக்குநர்  வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நடிகர்  தனுஷை வைத்தே படம் இயக்கி வெற்றி கண்டு வருகிறார்.  சமீபத்தில் இவரின் அசுரன் திரைப்படம் 100 கோடி வசூலை பெற்றதாகப்  படத்தின் தயாரிப்பாளர்  தாணு அறிவித்தார். இதை தொடர்ந்து நடிகர் சூரியை வைத்து காமெடி படம் இயக்க திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், சமீபத்தில் நடிகர் ஷாருக்கானை சந்தித்தார்.  மேலும் அசுரன் படத்தை  ஷாருக்கான் பார்த்து ரசித்துள்ளார். அதனால் என்னை சந்திக்க விரும்பினார். மற்றபடி வேறேதும் இல்லை’ என்று  கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.