அடுத்த தமிழக பாஜக தலைமை யார்? – வானதி சீனிவாசன் பதில்

அடுத்த தமிழக பாஜக தலைமை யார்? – வானதி சீனிவாசன் பதில்

பாரதீய ஜனதா கட்சியில் அமைப்பு ரீதியாக தேர்தல் நடக்கும்  நேரத்தில்தான் எந்தந்த மாநிலத்தில் எந்தெந்த தலைவர்கள் பொறுப்புக்கு மாற்றங்கள் செய்யவார்களோ அப்போது தான் செய்வார்கள் என தமிழக பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் பின்னடைவை சந்தித்தது. இதனால் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் மாற்றப்படுவார் என்றும், அவருக்கு பதில் வானதி சீனிவாசன் அந்த இடத்திற்கு வருவார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “பாரதீய ஜனதா கட்சியில் அமைப்பு ரீதியாக தேர்தல் நடக்கும்  நேரத்தில்தான் எந்தந்த மாநிலத்தில் எந்தெந்த தலைவர்கள் பொறுப்புக்கு மாற்றங்கள் செய்யவார்களோ அப்போது தான் செய்வார்கள் .  தேர்தல் தோல்விக்காக தலைவர் மாற்றம் இருக்காது. யார் தலைவர் என்பதை கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். 

கட்சியில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கீழ் மட்டத்தில் இருந்து தலைமை வரை தேர்தல் நடத்த கூடிய கட்சி பா.ஜ.க. தேர்தல் தோல்வி, வெற்றி வைத்து செய்யக்கூடியதல்ல. அமைப்பு ரீதியாக தேர்தல் நடந்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் நடத்தப்பட்டு தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம்.   ஒரு தலைவர் 2 முறைக்கு மேல் வர முடியாது. இது கட்சி அமைப்பு ரீதியான முடிவுகள்” என்று கூறினார்.