‘அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்’ : வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை!

 

‘அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்’  : வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை!

காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும் போன்ற அறிவுறுத்தல்களையும் அரசு சார்பிலும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை: டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு  தமிழகத்துக்கும் பரவும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த  ஒரு வாரமாக  கற்று மாசுபாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும் போன்ற அறிவுறுத்தல்களையும் அரசு சார்பிலும் வழங்கப்பட்டுள்ளது.

ttn

பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் காற்று மாசு ஏற்படுகிறது. அதனால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்பட்டது இல்லை. இருப்பினும் இந்த முறை அப்படி இருக்காது என்று  தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு கிழக்கு கடற்கரை பகுதி வழியாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பரவும் என்றும் வடகிழக்கு பருவமழையில் ஏற்பட்டுள்ள இடைவெளி காரணமாக  தமிழக்தில் அடுத்தவாரம் காற்று மாசு அதிகரித்துக் காணப்படும்’ என்றும் பதிவிட்டுள்ளார்.