அடுத்த ஜென்மத்திலும் கூட நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடமாட்டாராம் அஜீத்…

 

அடுத்த ஜென்மத்திலும் கூட நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடமாட்டாராம் அஜீத்…

பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் அறிமுகமாகி கலைமாமணி விருது பெற்ற கொல்லங்குடி கருப்பாயி நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க சிவகங்கையில் இருந்து வந்து இருந்தார்.

நடிகர் சங்கம் என்கிற ஒன்றை தன் கால் தூசாகக் கூட மதிக்காத அஜீத் இந்த முறையும் வாக்களிக்க வரவில்லை. அவரோடு தனக்கு ஆதரவாகப்பேசவில்லை என்ற கோபத்தில் இம்சை அரசன் வடிவேலும் நடிகர் சங்கத் தேர்தலைப் புறக்கணித்தார்.

ajith

தனது துவக்ககாலப் போராட்டத்தின்போது தன்னை மிகவும் அவமானப்படுத்தினார்கள் என்ற காரணத்துக்காக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நடிகர் சங்கத்தின் பக்கமே பல வருடங்களாக எட்டிப்பார்க்காத அஜீத் நேற்றும் வாக்களிக்கவரவில்லை. அவரிடௌன் இம்முறை வைகைப்புயல் வடிவேலுவும் தன்னை இணைத்துக்கொண்டு நடிகர் சங்கத் தேர்தலை பகிஷ்கரித்தார். இயக்குநர் ஷங்கருக்கும் தனக்குமுள்ள பிரச்சினையை நடிகர் சங்கம் கண்டுகொள்ளவில்லை என்பது வைகைப் புயலின் ஆதங்கம்.

nayan

 இந்த இருவரோடு, ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ராதிகா, ஜோதிகா, நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா, சிம்ரன், ஓவியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் ஓட்டுப்போடவில்லை. இவர்கள் வாக்களிக்க வராமல் போனதற்கான காரணங்கள் வெளிவர கொஞ்ச கால அவகாசமாகலாம்.

vishal

நடிகர் சங்க தேர்தலை நடத்த விடக்கூடாது என்றும், ஓட்டுப்போட வருபவர்களை அடித்துவிரட்ட வேண்டும் என்றும் ஒருவர் பேசிய ஆடியோ நேற்று அதிகாலையில் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் தேர்தலில் வன்முறை ஏற்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்த புனித எப்பாஸ் பள்ளியை சுற்றி 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் 10 போலீஸார் கூட தேவைப்பட்டிருக்கவில்லை.

பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் அறிமுகமாகி கலைமாமணி விருது பெற்ற கொல்லங்குடி கருப்பாயி நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க சிவகங்கையில் இருந்து வந்து இருந்தார். ஆனால் அவருக்கு ஓட்டு இல்லை என்று வாக்குச்சாவடி ஊழியர்கள் கூறிவிட்டனர்.இதனால் வருத்தமான கொல்லங்குடி கருப்பாயி கூறும்போது, “தேர்தலில் ஓட்டுப்போட வரும்படி இரண்டு அணியினரும் கடிதம் அனுப்பினார்கள். இங்கு வந்தபிறகு எனக்கு ஓட்டு இல்லை என்று முகத்தில் கரிபூசி விட்டனர். விஷால் எனக்கு உறுப்பினர் கார்டு வாங்கி கொடுத்தார். அதை காட்டியும் ஓட்டு போடவிடவில்லை” என்றார்.