“அடுத்த ஒரு வாரத்தில் 50,000 பேர் உயிரிழப்பார்கள்” எச்சரிக்கை விடுக்கும் டெட்ராஸ் கெப்ரிசிஸ்

 

“அடுத்த ஒரு வாரத்தில் 50,000 பேர் உயிரிழப்பார்கள்” எச்சரிக்கை விடுக்கும்  டெட்ராஸ் கெப்ரிசிஸ்

பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  இந்தியாவில்   ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 9 லட்சத்து 32ஆயிரத்து 605  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்  பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  இந்தியாவில்   ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

tt

இந்நிலையில்  சர்வதேச சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் கெப்ரிசிஸ், உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அடுத்த ஒரு வாரத்தில் 50,000 பேர் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ttn

 கொரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த ஒரே வாரத்தில் இரட்டிப்பானது பெரும் கவலை தருகிறது. இதனால்  சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் கூறியுள்ளார். அடுத்த ஒருவாரத்தில் உலகளவில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு 1 லட்சத்தை தொடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.