அடுத்த ஆண்டு சென்னையோட நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்: நிதிஆயோக் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

அடுத்த ஆண்டு  சென்னையோட நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்: நிதிஆயோக் வெளியிட்ட  அதிர்ச்சி ரிப்போர்ட்!

சென்னையில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் காணாமல் போகும் என்று நிதிஆயோக் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னையில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் காணாமல் போகும் என்று நிதிஆயோக் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் பருவமழை தாமதத்தால் வரலாறு காணாத  தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தண்ணீர் இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சில இடங்களில் குடிநீர் அதிக விலைக்கு விற்கும் நிலையும்  ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

water

இந்நிலையில் நிதிஆயோக் அமைப்பு  சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 21 நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் இல்லாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் சிறந்த நீர் ஆதாரங்கள் மற்றும் மழைப்பொழிவு இருந்தபோதிலும், 3 ஆறுகள், 4 நீர் நிலைகள், 5 ஈர நிலங்கள், 6 வனப்பகுதிகள் ஆகியவை தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. 

water

மேலும் அந்த அறிக்கையில்  2030-ம் ஆண்டில் சுமார் 40சதவீத மக்களுக்குக் குடிநீரே கிடைக்காது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அதிக செலவை ஏற்படுத்தும். அதனால், மக்கள் நிலத்தடி நீர் மட்டத்தை  உயர்த்த அரசுடன் இணைந்து  பணியாற்ற  வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.