அடுத்த ஃபர்னிச்சர் காஷ்மீரா? கேபினட் அமைச்சரவை முடிவு விரைவில்!

 

அடுத்த ஃபர்னிச்சர் காஷ்மீரா? கேபினட் அமைச்சரவை முடிவு விரைவில்!

அடுத்த ஒரு சில மணி நேரங்களில் மிகமுக்கிய நிகழ்வுகள் இருக்கும் என்பது உறுதி. இதுகுறித்து முடிவெடுப்பதற்காக பிரதமர் தலைமையிலான கேபினட் அமைச்சரவை கூட்டம் தற்போது நடந்துவருகிறது.

வாரம் பத்து நாட்களாக காஷ்மீரில் வலுக்கட்டாயமாக இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட, 35,000 கூடுதல் படைவீரர்கள் மாநிலமெங்கும் குவிக்கப்பட்டுள்ளனர். உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, சஜன் லோன் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு காஷ்மீரில் இல்லாமல், குடியரசு தலைவரின் ஆட்சி நடைபெற்றுவருவதால், மாநிலம் முழுவதுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தொலைபேசி, இணையசேவை உள்ளிட்டவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு அடுத்த அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Cabinet Meeting

சில மாதங்களுக்கு முன்பு, பிரதமர் மிக முக்கிய அறிவிப்பு வெளியிடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டு, செயற்கைக்கோள் ஏவியதைப் பற்றி பேசி, உப்புச்சப்பில்லாமல் ஆனதுபோல் இந்தமுறை இருக்காது என்பது மட்டும் நிச்சயம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் மிகமுக்கிய நிகழ்வுகள் இருக்கும் என்பது உறுதி. இதுகுறித்து முடிவெடுப்பதற்காக பிரதமர் தலைமையிலான கேபினட் அமைச்சரவை கூட்டம் தற்போது நடந்துவருகிறது. டீமானிட்டைசேஷனுக்கு அடுத்தபடியாக உடைபட இருக்கும் காஷ்மீர் ஃபர்னிச்சரா என்பது வெகுவிரைவில் தெரியவரும்.