அடுத்தவாரம் முதல் சன் டிவியில் பழைய சீரியல்!

 

அடுத்தவாரம் முதல் சன் டிவியில் பழைய சீரியல்!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 874 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன்,  திரைப்படத்துறை, சின்னத்திரை, விளம்பரத்துறை உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

thangam

 

இதனால் மெகா சீரியல் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டதால் அடுத்த வாரம் முதல் பழைய சீரியல்களை ஒளிபரப்புகிறது சன் டிவி. முதற்கட்டமாக விஜயகுமார், ரம்யாகிருஷ்ணன் நடித்த தங்கம் சீரியல் அடுத்த புதன்கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. சனிக்கிழமைகளில் சீரியல்களுக்கு பதில் திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.