அடுத்தடுத்து ஓய்வு பெறும் வீரர்கள்… அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

 

அடுத்தடுத்து ஓய்வு பெறும் வீரர்கள்… அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 36 வயதான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் அம்லா. 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா இதுவரையில் 28 சதங்களுடன் 9,282 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்கிற பெருமையும் அம்லாவுக்கு உண்டு. 2012ல் இங்கிலாந்துடனான போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 311 ரன்களை அம்லா எடுத்திருந்தார்.

அடுத்தடுத்து ஓய்வு பெறும் வீரர்கள்… அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 36 வயதான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் அம்லா. 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா இதுவரையில் 28 சதங்களுடன் 9,282 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்கிற பெருமையும் அம்லாவுக்கு உண்டு. 2012ல் இங்கிலாந்துடனான போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 311 ரன்களை அம்லா எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்காவின் முதல் வெள்ளையர் அல்லாத அணித் தலைவராக இருந்த பெருமையும் அம்லாவிற்கு உண்டு. 2014 முதல் 2016 வரையில் அந்நாட்டு டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கிய அம்லா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 349 போட்டிகளில் பங்கேற்று 55 சதங்களுடன் 18,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், ஹசிம் அம்லாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் ஹசிம் அம்லா அடித்த 27 சதங்களே இதுவரையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒரு நாள் போட்டிகளில் அடித்த அதிகபட்ச சதங்களின்  எண்ணிக்கையாகும்.