அடிச்சி தூக்கு”…தூக்கு போடும் “திஷா” சட்டத்துக்கு 2 பெண் அதிகாரிகள்-“ரேப்பு” க்கு ஆந்திராவின் ஆப்பு… 

 

அடிச்சி தூக்கு”…தூக்கு போடும் “திஷா” சட்டத்துக்கு 2 பெண் அதிகாரிகள்-“ரேப்பு” க்கு ஆந்திராவின் ஆப்பு… 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனை வழங்குவதற்காக கடந்த மாதம் மாநில சட்டசபையால் கொண்டுவரப்பட்ட திஷா சட்டத்தை செயல்படுத்த ஆந்திராவில் இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனை வழங்குவதற்காக கடந்த மாதம் மாநில சட்டசபையால் கொண்டுவரப்பட்ட திஷா சட்டத்தை செயல்படுத்த ஆந்திராவில் இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்டை மாநிலமான  தெலுங்கானாவில் ஒரு இளம் பெண்  கற்பழிப்பு மற்றும் கொலையான  இரண்டு வாரங்களுக்குப் பிறகு, டிசம்பர் 13 அன்று திஷா சட்டத்தை  மாநில சட்டசபை கொண்டு வந்தது .

அந்த கொடூரமான சம்பவத்துக்கு பிறகு   சமூக ஊடக பிரச்சாரங்கள் மூலம் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெயர் “திஷா”. இந்த பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் டிசம்பர் 6 ம் தேதி  சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறி போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்காக சிறப்பு நிர்வாகிகளாக இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்) அதிகாரி டாக்டர் கிருத்திகா சுக்லா மற்றும் இந்திய போலீஸ் சேவை (ஐ.பி.எஸ்) அதிகாரி எம். தீபிகா ஆகியோர் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர். “தற்போது பெண் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நல இயக்குநராக இருக்கும் டாக்டர் கிருத்திகா சுக்லாவுக்கு திஷா சிறப்பு அதிகாரியாக கூடுதல் பதவி  வழங்கப்பட்டுள்ளது. கர்னூலின் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும்  (நிர்வாகம்) எம். தீபிகா இடமாற்றம் செய்யப்பட்டு “திஷா”வின்  சிறப்பு பதவியில் அமர்த்தப்பட்டார்.
.
ஆந்திர மாநில குற்றவியல் சட்டம் (திருத்தம்) , கற்பழிப்பு மற்றும் அமிலத் தாக்குதல்களில் விரைவான விசாரணை மற்றும் தீர்ப்பை வழங்க உதவுகிறது, இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் ,விசாரணையை 14 நாட்களுக்குள் முடிக்க வேண்டும், தீர்ப்பை 21 நாட்களுக்குள் வெளியிட  வேண்டும். மேல்முறையீட்டு காலம் ஆறு மாதங்களிலிருந்து 45 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

போதுமான உறுதியான சான்றுகள் கிடைத்தால்  கற்பழிப்பு குற்றங்களுக்கு  மரண தண்டனைவிதிப்பது  புதிய சட்டத்தின் சிறப்பம்சம்  . 
விரைவான விசாரணை செய்வதற்காக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம், ஆசிட் தாக்குதல்கள் மற்றும் சமூக ஊடக துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களைச் சமாளிக்க 13 மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை அரசு அமைக்கும்.