அடிச்சி தூக்கும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

அடிச்சி தூக்கும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படமும் வரும் ஜன.10ம் தேதி ரிலீசாகிறது. முதன் முறையாக தல அஜித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடியாக மோதவுள்ளனர். இவ்விரு திரைபப்டங்களின் புரொமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ திரைப்படங்களின் டிரைலர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இரு படங்கள் தொடர்பான ட்வீட்களையும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.