அடிக்கல் நாட்டியது மகிழ்ச்சி: பிரதமர் மோடி

 

அடிக்கல் நாட்டியது மகிழ்ச்சி: பிரதமர் மோடி

எய்ம்ஸ் மருத்துமனைக்கு அடிக்கல் நாட்டியது மகிழ்ச்சியளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மதுரை: எய்ம்ஸ் மருத்துமனைக்கு அடிக்கல் நாட்டியது மகிழ்ச்சியளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், மதுரை, தஞ்சை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளையும், 12 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களையும் அவர் இன்று திறந்து வைத்தார்.

அதன்பிறகு பேசி அவர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் மதுரைக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை சுகாதாரத்துறையில் பெயர் பெற்று விளங்குகிறது. மதுரையில், ரூ 1200 கோடி அளவிலான மதிப்பீட்டில் எய்ம்ஸ் அமைய இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.

பிரதான் மந்திரி ஆரோக்ய யோஜனா திட்டம் மூலம் 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இளநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் TB இல்லாத மாநிலமாக உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.