அடிக்கடி ஜலதோஷாமா? ஆண்டிபயாடிக் ஆபத்துகளை அழைக்காதீங்க!

அடிக்கடி ஜலதோஷாமா? ஆண்டிபயாடிக் ஆபத்துகளை அழைக்காதீங்க!

மழை இப்போது வருவேனா… வரமாட்டேனா என்று போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. கோடை வெப்பம் முடிவடைந்தாலும், அனல் காற்று குறையவில்லை. அப்படி வெப்ப சலனத்தில் வரும் முதல் மழையில் நனைந்தால்,  ஜலதோஷம் வரும். நல்ல அடைமழையில் நனைவது ஆனந்தம் தானே? ஆனால் ஒரு நிமிட தூறலில் நின்று விடும் மழையில் நனைவது ஆபத்தானது. அப்படி அடிக்கடி ஜலதோஷம் என்றால் பெரிய தொல்லை தான். மூக்கடைப்பு, மூக்கில் சளி என்று வரிசையாக ஒரு வாரத்திற்கு இம்சை படுத்தி தான் சரியாகும். 

rain

மழை மட்டுமில்லாமல், ஒருவருக்கு அடிக்கடி தலையில் நீர் கோர்த்துக் கொள்வது, ஒவ்வாமை, குளிர்பானங்கள் அருந்துவது என்று பல காரணங்களால் ஜலதோஷம் வருகிறது. சாதாரண ஜலதோஷத்திற்கு எல்லாம் மெடிக்கல் ஷாப்களில் போய் மருந்து மாத்திரை என்று ஆண்டிபயாடிக் மருந்துக்களை வாங்கி சாப்பிட்டு உடம்பை மருந்துக்கு அடிமையாக்காதீர்கள். 

medicines

நம் வீட்டிலேயே சாதாரண உணவு வகையிலேயே ஜலதோஷத்தை சரிசெய்யலாம்.  ஜலதோஷ நேரத்தில் மிளகு ரசம் ஒரு கப் குடித்து வரலாம்.  தினமும் சூடான ரசம் ஒரு கப் குடிப்பது நல்லது. மூன்றே நாட்களில் ஜலதோஷம் சரியாகிவிடும். நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தான் நோயை விரட்ட வேண்டும். அதற்கு இப்படியான இயற்கை உணவுகளே சிறந்தது.

milagu rasam

 உணவில் கீரை வகைகளை சேர்த்து வரலாம்.எள்விதையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்ல பலன் தரும். வெங்காயம் , பூண்டு , இஞ்சி, மீன் உணவு முதலியவை மூக்கு அடைப்பை அகற்றி விடும். தேநீரை தவிர்க்க வேண்டாம். ஆனால், பால் கலக்காத தேநீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து அருந்துங்கள். நல்ல பலன் கிடைக்கும்.  அசைவ உணவுக் காரர்கள் மூக்கு அடைப்பை எளிதில் சரி செய்து கொள்ளலாம். மிளகு , வெள்ளைப்பூண்டு சேர்த்த தயாரித்த கோழியில் சூப் செய்து ஒரு கப் வாரம் இருமுறை அருந்தினால் ஜலதோஷமும், சைனஸும் கட்டுப்பாட்டில் இருக்கும். 
 
chicken soup

தினமும் அரைமணி நேரம் யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்வதும் நன்மை பயக்கும். தினமும் வெந்நீர் அல்லது நீராவிக் குளியல் நல்லது. சுட வைத்த குடிநீர் மூலமும் மூக்கடைப்பு, ஜலதோஷத்தை தவிர்க்க முடியும். இந்த சிறு சிறு மாற்றங்களின் மூலமே ஜலதோஷத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
மூக்கடைப்பு நேரத்தில் மட்டுமல்லாது, தொடர்ச்சியாக இப்படி ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தால், நோய் ஏன் நம்மை எட்டிப் பார்க்கப் போகிறது?