அடிக்கடி உங்கள் முகம் கருத்துப்போகிறதா…கவலைப்படாதீங்க: இதை ட்ரை பண்ணினால் போதும்!

 

அடிக்கடி உங்கள் முகம் கருத்துப்போகிறதா…கவலைப்படாதீங்க: இதை ட்ரை பண்ணினால் போதும்!

கோடை காலங்களில் ஏற்படுக்கூடிய இன்னொரு பிரச்சினை முகம் அநியாயத்துக்கு கருத்துப்போவது. டூ வீலர் அல்லது வேறு வாகனங்களில் பயணிக்கும் போது முகத்தை முழுவதுமாக மூடியபடி போகிறவர்கள் குறைவு.அடிக்கிற வெயிலுக்கு எப்படித்தான் பாதுகாப்பாக இருந்தாலும் முகம் கருத்துப்போவதை தவிர்க்க முடியாது.

கோடை காலங்களில் ஏற்படுக்கூடிய இன்னொரு பிரச்சினை முகம் அநியாயத்துக்கு கருத்துப்போவது. டூ வீலர் அல்லது வேறு வாகனங்களில் பயணிக்கும் போது முகத்தை முழுவதுமாக மூடியபடி போகிறவர்கள் குறைவு. அடிக்கிற வெயிலுக்கு எப்படித்தான் பாதுகாப்பாக இருந்தாலும் முகம் கருத்துப்போவதை தவிர்க்க முடியாது.

கடைகளில் விற்கப்படும் அழகுப்பொருள்கள் அதிக விலையில் தான் கிடைக்கும் என்பதால் எல்லோராலும் அதை வாங்கிப் பயன்படுத்த முடியாது. அப்படிப்பட்டவர்கள் ஃபேஸ் பேக் நிச்சயம் உதவும்.

 

tan

இப்போது மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது.குறைந்த விலைகளிலேயே கிடைக்கும்.கார்பைட் கல் போட்டு பழுக்கவைத்த மாங்காய்களை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம்.முடிந்தவரை வீட்டில் அல்லது உறவினர்கள் வீடுகளில் விளையும்  மாம்பழங்களை வாங்கி செய்து பாருங்கள்.
 
இதோ நமது சருமத்திலிருந்து டானை நீக்க உதவும் மாம்பழ பாஸ் பேக் எப்படி செய்வதென்று பாருங்கள். 
 
தேவையான பொருட்கள் 
 
மாம்பழ சாறு – 4 tbsp 
கடலை மாவு – 2 tbsp 
தேன் – 1 tsp 
தயிர் – 1 tsp 
 
 
செய்முறை 

tan

 
அனைத்து பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலக்கி கொள்ளவும். பிறகு இந்த பேஸ்ட்டை முகம் முழுக்க அழுத்தமாக பூசி அப்படியே 15 நிமிடம் வரை உலர விடுங்கள். அதன் பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் ‘பளிச்’சென்று இருக்கும். உங்களின் தேவைக்கேற்ப இதை செய்து பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: ஆண்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்களை போக்க சிம்பிள் டிப்ஸ்!