அடப்பாவமே! களமிறங்க விரும்பிய டீ வில்லியர்ஸ். நோ சொன்ன நிர்வாகம்!

 

அடப்பாவமே! களமிறங்க விரும்பிய டீ வில்லியர்ஸ். நோ சொன்ன நிர்வாகம்!

உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் நேரடியாக உலககோப்பைக்கு தேர்வுசெய்வதில் உள்ள சிக்கல்களை காரணம் காட்டி டீ வில்லியர்ஸ்க்கு நோ சொல்லியிருக்கிறாது அணி நிர்வாகம். இப்போது, அவர்கள் ஆடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவி, அடுத்து வருகிற ஆறு ஆட்டங்களிலும் வென்றாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தென்னாப்பிரிக்க அணி.

கடந்த ஆண்டு, 2018 மே, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார் தென்னாபிரிக்காவின் மேஜிக்கல் பேட்ஸ்மன் டீ வில்லியர்ஸ். ஓய்வுக்கான காரணத்தை கூறும்போது, தான் மிகவும் சோர்ந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். உலககோப்பை கிரிக்கெட் துவங்குவதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக தன் ஓய்வு முடிவை அவர் அறிவித்துவிட்டதால், அவருக்குப் பதிலாக பிற வீரர்களை உலககோப்பைக்கு தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் தயாரித்து வந்தது. இந்நிலையில், உலக்கோப்பைக்கான அணி வீரர்களை அறிவிக்க இருந்ததற்கு 24 மணி நேரம் முன்பாக, நிர்வாகத்தை தொடர்புகொண்ட டீ வில்லியர்ஸ், தான் அணிக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அணி நிர்வாகம் அதனை ஏற்கவில்லை என்ற தகவல், அந்த அணி மூன்று போட்டிகளில் தோற்றுவிட்ட நிலையில் இப்போது கசியவிடப்பட்டுள்ளது.

Ab De Villiers

ஒரு நாள் போட்டிகளில் மட்டும் 228 ஆட்டங்களில் 9577 ரன்களை 53.50 சராசரி என்ற அளவில் குவித்திருக்கும் டீ வில்லியர்ஸ்க்கு 35 வயதாகிறது. உலககோப்பைக்கான அணி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக கேப்டன் ஃபேஃப் டூ ப்ளீசிஸ், கோச் கிப்ஸன், மற்றும் தேர்வுக்குழு தலைவர் லின்டா ஆகியோரை டீவில்லியர்ஸ் சந்தித்து, அணிக்கு திரும்ப விரும்புவதாக கூறியிருக்கிறார். ஆனால், உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் நேரடியாக உலககோப்பைக்கு தேர்வுசெய்வதில் உள்ள சிக்கல்களை காரணம் காட்டி டீ வில்லியர்ஸ்க்கு நோ சொல்லியிருக்கிறாது அணி நிர்வாகம்.

Faf Du Plesis

இப்போது, அவர்கள் ஆடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவி, அடுத்து வருகிற ஆறு ஆட்டங்களிலும் வென்றாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. வழக்கமாக, அரையிறுதி மாதிரியான முக்கியமான ஆட்டங்களில் மட்டும் சொதப்பும் அணி, இந்தமுறை வீரர்கள் தேர்வின்போதே கோட்டை விட்டிருக்கிறது. அப்படீன்னா, டீ வில்லியர்ஸ் இருந்திருந்தா தென்னாப்பிரிக்க கப் ஜெயிச்சுருமா என்றால், அவர் இருந்திருந்தால் முதல் மூன்று மேட்ச்சையுமே அந்த அணி இழந்திருக்காது என்பது மட்டும் நிச்சயம்.