அடடே! ‘சின்னத்தம்பி’ கோவையை சுற்றிச்சுற்றி வருவதற்கு இப்டியொரு சுவாரஸ்யமான ஜோதிடப் பின்னணி இருக்கா?

 

அடடே! ‘சின்னத்தம்பி’ கோவையை சுற்றிச்சுற்றி வருவதற்கு இப்டியொரு சுவாரஸ்யமான ஜோதிடப் பின்னணி இருக்கா?

சில நாட்களாக பத்திரிக்கையில் தினந்தோறும் சின்னத்தம்பி என்ற காட்டுயானை கோவை ஒட்டிய வனப்பகுதியிலிருக்கும் கிராமப்பகுதிகளில் வலம்வருவது பற்றிய செய்தி பரபரப்பாக அடிபடுகிறது

சில நாட்களாக பத்திரிக்கையில் தினந்தோறும் சின்னத்தம்பி என்ற காட்டுயானை கோவை ஒட்டிய வனப்பகுதியிலிருக்கும் கிராமப்பகுதிகளில் வலம்வருவது பற்றிய செய்தி பரபரப்பாக அடிபடுகிறது.  இதற்குக் காரணம் அந்த யானையின் ஜோதிடப் பலன்தான் என்ற பேச்சு இப்போது வைரலாகி இருக்கிறது!

கோவை மாவட்டம் பெரிய தடாகம் வனப் பகுதியில் பலநாள்களாகச் சுற்றித்திரிந்து கிராம மக்களுக்கு கிலியூட்டி வந்த சின்னத்தம்பி என்ற காட்டு யானையை வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியோடு பிடித்து வால்பாறை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விட்டனர். 

chinnathambi

அந்த நிம்மதி ஒருசில நாள்கள்கூட நிலைக்கவில்லை. 100 கிலோமீட்டருக்கும் மேலே பயணித்து காட்டை விட்டு வெளியேறி மீண்டும் அதே தடாகம் பகுதியில் இந்த யானை இப்போது சுற்றித் திரிகிறது. ஆனாலும் மக்களுக்குப் பெரிய பிரச்னையெல்லாம் தரவில்லை.

அந்த யானை மீண்டும் வந்ததற்கு பின்னால் சில ஜோதிட சுவாரஸ்யங்கள் மறைந்துள்ளன என ஜோதிடர்கள் சிலர் கூறுகின்றனர். என்ன தெரியுமா? கேட்டால் ஆச்சரியம்தான்!

பொதுவாக தனுசு ராசி, கோவை மாவட்டத்தை குறிக்கும் ராசியாகும் அப்போது தனுசு ராசிக்கு உரிய கிரகம் ‘குரு’ என்று எடுத்துக்கொள்வோம்.

chinnathambi

‘குரு’ என்றால் யானைக்கு காரகம். யானைக்கு யானை என்றால் குரு என்றும் அர்த்தம் ஆகிறது.

பொதுவாக கோட்சாரத்தில் ராசியிலோ, ராசிக்கு 12-ல் குரு சஞ்சரிக்கும் காலத்தில் யாராக இருந்தாலும் மிகப்பெரிய மனப்போராட்டத்தை கொடுக்கும் என்பது உறுதி.

அப்படி பார்க்கும்போது இந்தச் சின்னத்தம்பி என்ற யானைக்கு இதே பிரச்னைதான். அது இருக்க வேண்டிய இடத்திலிருந்து இடமாற்றம் வந்துவிட்டது. இடம் மாறிச் சென்றாலும் அங்கே இருக்க முடியாமல் மிகப்பெரிய மனப்போராட்டத்தில் சிக்கி பல நூறு கிலோ மீட்டர் நடந்தே தான் வாழ்ந்த அதே இடத்துக்கு திரும்ப வந்து விட்டது. மீண்டும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டே இருக்கிறது இதனுடைய போராட்டம் நின்றபாடில்லை.

chinnathambi

பொதுவாக ஒரு ராசி பலன் என்னவென்றால் குரு பன்னிரண்டில் வரும் காலத்தில் மனப்போராட்டம் இடமாற்றம் போன்ற முக்கிய பிரச்னைகளை அவர்கள் சந்தித்தே தீர வேண்டும்.

இதனால் தான் முன்பு நம் பெரியவர்கள் பன்னிரண்டில் குரு வரும் காலத்தில் எங்காவது தீர்த்தாடனம் சென்றுவிடுவார்கள் அவர்களது இந்த அலைச்சலும் மனப்போராட்டமும் புண்ணிய காலத்தில் செலவு செய்ய

கோயில் என்றாலும் குரு தான். அதனால்தான் 12 வருடத்துக்கு ஒருமுறை கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும் நடைமுறையும் நம்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.

சின்னத்தம்பி என்ற பெயரை

Chinnathambi

C+H+I+N+N+A+T+H+A+M+B+I

3+5+1+5+5+1+4+5+1+4+2+1=37 3+7=10-(1)

நியூமராலஜி என்ற கணிதத்தின் படி அளந்து பார்த்தால் 1 என்ற எண் வருகிறது

chinnathambi

1 என்ற எண் சூரியனுடைய ஆதிபத்தியம் கொண்டது. தனுசு ராசியில் சூரியனுடைய நட்சத்திரங்களில் ஒன்றான உத்திராடம் இருக்கிறது. விநாயகர் பிறந்த நட்சத்திரம்!

இதில் ஆச்சரியம் என்னவென்றால் விநாயகருக்கு தந்தம் உடைந்துவிட்டது. இந்த சின்னத்தம்பி யானையை வனத் துறையினர் போராடி வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிக்கும் பொழுது சின்னத்தம்பியின் கொம்பும் உடைந்து விட்டது!

எப்படி ஆராய்ந்தாலும் ஜோதிடத்தில் மிகப்பெரிய ஆச்சரியங்களும் காத்திருக்கிறது.