அடகு வைத்த நகை மாயம்! வங்கி அதிகாரிகள் 7 பேர் கைது!!

அடகு வைத்த நகை மாயம்! வங்கி அதிகாரிகள் 7 பேர் கைது!!

திருவண்ணாமலையில் இயங்கி வரும் பிரபல தனியார் வங்கியான கரூர் வைசியா வங்கியில் கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி ஒன்றரை கோடி மதிப்பிலான பொதுமக்கள் அடமானம் வைத்த நகை மாயமான விவகாரத்தில் வங்கி ஊழியர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலையில் இயங்கி வரும் தனியார் வங்கியான கரூர் வைசியா வங்கியில் ஒரு கோடியே 16 லட்சத்து,4 ஆயிரம் (1,16,04,000) மதிப்பிலான 3710 கிராம் நகைகள் காணாமல் போனது. இந்த விவகாரத்தில் சுரேஷ் முதுநிலை மேலாளர் சந்தான ஹரி விக்னேஷ், நகைக்கடன் பொறுப்பாளர் லாவண்யா, வங்கி மேலாளர் தேன்மொழி, உதவி மேலாளர் இசைவாணி, உதவி மேலாளர் கார்த்திகேயன், நகை மதிப்பீட்டாளர் மணிகண்டன்,  ஆகிய 7 பேரை கைது செய்து திருவண்ணாமலை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.