அடகு கடையையும் விட்டுவைக்காத கொள்ளையன் முருகன்! 

 

அடகு கடையையும் விட்டுவைக்காத கொள்ளையன் முருகன்! 

மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் அடகு கடையில் 1500 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டத்தில் முருகனுக்கு தொடர்பு உள்ளதா என மதுரை மாநகர காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் அடகு கடையில் 1500 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டத்தில் முருகனுக்கு தொடர்பு உள்ளதா என மதுரை மாநகர காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.

நரிமேடு பகுதியை கோபிநாத் என்பவருக்கு சொந்தமான தனலெட்சுமி அடகு கடையில், கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் அடகு கடையின் பூட்டை கேஸ் வெல்டிங் உதவியுடன் உடைத்து உள்ளே இருந்த சுமார் 1492 பவுன் நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.

Robbery

இந்த சம்பவம் தொடர்பாக அடகு கடையின் எதிர்புறம் உள்ள சிசிடிவி கேமராக்களை முகமூடி கொள்ளையர்கள் சேதப்படுத்தும் காட்சியும் , நகைகளை மினி வேனில் ஏற்றிச் சென்ற காட்சியும் அங்கிருந்த மற்றொரு கேமராவில் பதிவாகியிருந்தது.  இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு தனிப்படை காவல்துறையினர் வடமாநில கொள்ளையர்களுக்க , இதில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை ஏற்றி சென்ற மினி வேன் பதிவு எண்ணை கொண்டும் விசாரணை மேற்கொண்டனர் . 

இந்நிலையில் திருச்சி லலிதா ஜுவலரியில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனுக்கும் இந்த கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதால் மதுரை மாநகர காவல்துறை , திருச்சி காவல்துறையுடன் இணைந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இதுதொடர்பாக திருச்சியில் முகாமிட்டு முருகனின் கூட்டாளி சுரேஸிடம் தனிப்படை காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.