அடகுவைத்த ஒன்றரை கோடி நகைகள் மாயம் – வங்கி ஊழியர்கள் கூண்டோடு சிறையில்!

 

அடகுவைத்த ஒன்றரை கோடி நகைகள் மாயம் – வங்கி ஊழியர்கள் கூண்டோடு சிறையில்!

வேலியே பயிரை மேய்ந்த கதை எல்லாம் சர்வசாதாரணம். ஆனால், அங்கொன்று இங்கொன்றுமாக மேய்ந்தது போய், ஒட்டுமொத்த வெள்ளாமையையும் சேர்த்தே மோசம் போகுமா? போயிருக்கிறது திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் கரூர் வைசியா வங்கி கிளையில். மேற்படி கிளையில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகள் வைக்கப்பட்ட பைகளில், 40 பைகளை காணவில்லை. இந்த 40 பைகளிலும் மொத்தம் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவை அடமானம் பெற்ற நகைகளை மேலதிகாரிகள் வந்து தணிக்கை செய்து சரிபார்ப்பது வழக்கமான நடைமுறை. அப்படியான சரிபார்ப்பு நடவடிக்கையின்போதுதான் மேற்படி குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு, ஜூன் 4ஆம் தேதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

வங்கி சுவற்றில் ஓட்டைப்போட்டு நகைகளை திருடுபவர்களையே சிறுசிறு க்ளூவை வைத்து அடையாளம் காணும் காவல்துறையால், இதனை கண்டுபிடிக்க முடியாதா என்ன? வங்கிக்கிளையில் பணிபுரிந்த ஏழுபேரிடம் விசாரணை நடத்த ஆரம்பிக்க, பாட்டி சுட்ட வடை கதையை ஆளுக்கொரு வெர்சனில் சொல்லியிருக்கிறார்கள். சிசிடிவி இணைப்பை துண்டித்து நகைகளை ஆட்டைய போட்டதில் ஏழு பேருக்கும் பங்குண்டு என்று தெரிய வந்தவுடன், காப்பு போட்டு காவலில் வைத்துவிட்டனர். நகைகளை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.