அஜீத், விஜய் ரசிகர்களின் தரம் தாழ்ந்த பேச்சு! என்னை வம்புக்கு இழுக்காதீங்க என கோபபட்ட விவேக்!!

 

அஜீத், விஜய் ரசிகர்களின் தரம் தாழ்ந்த பேச்சு! என்னை வம்புக்கு இழுக்காதீங்க என கோபபட்ட விவேக்!!

சினிமாவைத் தாண்டி அஜித் – விஜய் இருவரும் நல்ல நண்பர்களாக நட்பு பாராட்டி வரும் நிலையில்,  அவரது ரசிகர்கள் இன்றும் எதிரும் புதிருமாக இருப்பது  ஆச்சிரியமாகவுள்ளது.  ட்விட்டர் முழுவதும் விஜய் புராணத்தை பார்த்து கடுப்பாகும் அஜித் ரசிகர்கள் பொங்கி எழுந்து விஜய்க்கு எதிரான ஹேஷ்டேக் அல்லது அஜித்துக்கு ஆதரவான ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்துவருவது வழக்கம். ஓரிரு நாட்கள் ட்விட்டரில் இந்த வார்த்தைப்போர் நடக்கும் அதன்பி முடிந்துவிடும்.

 

 

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விவேக், “நண்பர்கள் அஜீத், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை. என்னை tag செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.மீறிச் செய்தால் block ஆகும்.நேர்மறை பதிவுகளுக்கே நான் டுவிட்டரைப் பயன்படுத்துகிறேன். Stay home stay safe!” என பதிவிட்டுள்ளார்.