‘அஜீத் போல மாறும் விஜய்’ -மாஸ்டர் படத்திற்கு பிறகு மாபெரும்  மாற்றத்திற்கு தயாராகிறார் …

 

‘அஜீத் போல மாறும் விஜய்’ -மாஸ்டர் படத்திற்கு பிறகு மாபெரும்  மாற்றத்திற்கு தயாராகிறார் …

இப்போது, இளைய தளபதி விஜய் ,லோகேஷ் கனகராஜ் இயக்கும்   மாஸ்டர்  படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார் என்று தகவல் வந்துள்ளது .இதற்கிடையில், அவரது அடுத்த படம் குறித்து ரசிகர்கள் ஏற்கனவே பொறுமையிழந்து வருகின்றனர். இளையதளபதி  விஜய்யின் அடுத்த படம் பற்றி நிறைய யூகங்கள்  உள்ளன.இப்போது, உலாவரும் சமீபத்திய தகவல்  , விஜய்யின் அடுத்த படம்  நாடோடிகள்  புகழ் சமுத்திரகனியுடன் இருக்குமாம்.

இப்போது, இளைய தளபதி விஜய் ,லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர்  படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார் என்று தகவல் வந்துள்ளது .  

இதற்கிடையில், அவரது அடுத்த படம் குறித்து ரசிகர்கள் ஏற்கனவே பொறுமையிழந்து வருகின்றனர். இளையதளபதி  விஜய்யின் அடுத்த படம் பற்றி நிறைய யூகங்கள்  உள்ளன.இப்போது, உலாவரும் சமீபத்திய தகவல்  , விஜய்யின் அடுத்த படம்  நாடோடிகள்  புகழ் சமுத்திரகனியுடன் இருக்குமாம். இயக்குனர் சமுத்திரக்கனி  சமீபத்தில் விஜய்யை  சந்தித்த  பிறகு இந்த வதந்திகள் தோன்றின,  அவர் விஜய்க்கு  ஒரு ஸ்கிரிப்டை விவரித்ததாகவும், விஜய் சரியான நேரம் வரும்போது படப்பிடிப்புக்கு  காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

இருப்பினும், விஜய் தனது அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை . இப்போது , அவர் புது கதைகள் கேட்டு வருவதாகவும் ,திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் அவரை ஒப்பந்தம் செய்ய வரிசையில் நிற்பதால் முதலில் யாருக்கு படம்பண்ணுவதென   முடிவு செய்ய முடியாமல் இருக்கிறாராம்.

master-movie-cast

விஜய் , அருண் ராஜா காமராஜ், வெற்றிமாறன் , பேரரசு, மோகன் ராஜா மற்றும் மகிழ்  திருமணி போன்றவர்களின்  ஸ்கிரிப்ட்களை கேட்டதாக  கூறப்படுகிறது. எந்தவொரு திரைப்பட தயாரிப்பாளருக்கும் அவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

மாஸ்டருக்கு பிறகு விஜய் ,அஜித் போல ஒரு நேரத்தில் ஒரு படம்தான்  பண்ண  விரும்புகிறார், அதனால்தான் அவர் தனது அடுத்ததை அறிவிப்பதற்கு முன்பு இந்த  படத்தை முடிக்க  காத்திருக்கிறார். எனவே, தயாரிப்பில் இருக்கும் தனது  மாஸ்டர் படத்தை முடித்த  பிறகு விஜய் தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

vijay

எனவே மாஸ்டர் முடிந்தவுடன் தளபதி  65 பற்றிய செய்திகளை எதிர்பார்க்கலாம். மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா ஜெரேமியா , சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த படம் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று கூறுகின்றனர்