அஜீத் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுக்கும் நடிகர் ஜெயம் ரவி

 

அஜீத் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுக்கும் நடிகர் ஜெயம் ரவி

தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களும் ஹிட் அடித்ததால் ஹாட்ரிக் வெற்றியைக் கொண்டாடினார். 

தனி ஒருவன் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் அனைத்துமே ஹிட் அடித்து வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது.

ttn

தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களும் ஹிட் அடித்ததால் ஹாட்ரிக் வெற்றியைக் கொண்டாடினார். 

ttn

இதையடுத்து  நடிகர் ஜெயம் ரவியின் 25 ஆவது படமான ‘பூமி’ படத்தை   ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களை இயக்கிய லக்‌ஷமன்  இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகை நித்தி அகர்வால் கதாநாயகியாக நடிக்க அவருடன் இணைந்து  தம்பி ராமையா, ராதாரவி, சதீஷ், சரண்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜெயம் ரவியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, டி. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்நிலையில் இப்படத்தின் செகண்ட்லுக் போஸ்டர் பொங்கல் விழாவையொட்டி நேற்று மாலை வெளியானது. மேலும் இப்படமானது வரும் மே  மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.