அஜீத்துக்கு பாலாபிஷேகம் செய்யும் போது சரிந்த கட் அவுட்… ரசிகர்கள் படுகாயம்

 

அஜீத்துக்கு பாலாபிஷேகம் செய்யும் போது சரிந்த கட் அவுட்… ரசிகர்கள் படுகாயம்

நடிகர் அஜீத் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது அந்த கட் அவுட் சரிந்து விழுந்ததில் ரசிகர்கள் காயமடைந்தனர்.

விழுப்புரம்: நடிகர் அஜீத் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது அந்த கட் அவுட் சரிந்து விழுந்ததில் அவரது ரசிகர்கள் காயமடைந்தனர்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.மேலும் தல தரிசனத்திற்காக சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே அவரது ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர். தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் திரைப்படம் ரசிக்க வைப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அஜீத்துக்கு அவரது ரசிகர்கள் 20 அடிக்கு கட் அவுட் வைத்தனர். இன்று படம் வெளியானதால் அந்த கட் அவுட்டிற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். அப்போது பாரம் தாங்காமல் கட் அவுட் சரிந்து விழுந்ததில் அவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.