அஜித் – ஷாலினி திருமண நாள்…ட்விட்டரில் ஹெஷ்டேக் வைரலாக்கும் ‘தல’ ரசிகர்கள்!

 

அஜித் – ஷாலினி திருமண நாள்…ட்விட்டரில் ஹெஷ்டேக் வைரலாக்கும் ‘தல’ ரசிகர்கள்!

இன்று அஜித் – ஷாலினி தம்பதியின் திருமண நாள். அவர்கள் திருமணம் செய்து கொண்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

இன்று அஜித் – ஷாலினி தம்பதியின் திருமண நாள். அவர்கள் திருமணம் செய்து கொண்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஏப்ரல் 24, 2000 அன்று அழகிய ஷாலினியை அஜித் மணந்தார். அதனால் இந்த அழகான ஜோடியின் புகைப்படங்களை இதயத்தைத் தூண்டும் செய்திகளுடன் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் அஜித் ஷாலினி திருமண நாள் தொடர்பான ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ajith

இந்த அழகான தம்பதியினருக்கு ரசிகர்கள் மகிழ்ச்சியோடு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அஜித் மற்றும் ஷாலினிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆவார்கள். அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது ஷாலினியிடம் அஜித் தனது காதலை வெளிப்படுத்தினார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகச் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, ஒரு வருடம் கழித்து அஜித் – ஷாலினி ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதியின் சில அரிய புகைப்படங்கள் மற்றும் அஜித் மற்றும் ஷாலினியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் ஆகியவற்றை ட்விட்டரில் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக நடிகர் விஜய் அந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாக பகிரப்படுகிறது.