அஜித்-விஜய் செஞ்சா தப்பில்ல; நான் செஞ்சா தப்பா? ஒப்பாரி வைக்கும் ஓவியா!?

 

அஜித்-விஜய் செஞ்சா தப்பில்ல; நான் செஞ்சா தப்பா? ஒப்பாரி வைக்கும் ஓவியா!?

மாப்பிள்ளையா இருந்தாலும் பொணமா இருந்தாலும் மொத மாலை எனக்குதான் விழணும்னு ‘எஜமான் படத்தில் நெப்போலியன் அடிக்கடி ஒரு டயலாக் சொல்வாரே ஞாபகம் இருக்கா? அப்படிதான் இருக்கு நடிகை ஓவியாவின் நிலமை!

‘மாப்பிள்ளையா இருந்தாலும் பொணமா இருந்தாலும் மொத மாலை எனக்குதான் விழணும்னு ‘எஜமான் படத்தில் நெப்போலியன் அடிக்கடி ஒரு டயலாக் சொல்வாரே ஞாபகம் இருக்கா? அப்படிதான் இருக்கு நடிகை ஓவியாவின் நிலமை!

அவர் நடித்துள்ள ‘90 எம்.எல்’ஃபர்ஸ்ட் லுக் வெளியான நேரத்திலிருந்தே ஒரு குரூப் கொண்டாடித்  தீர்ப்பதும்,இன்னொரு குரூப் இதெல்லாம் ரொம்ப டூமச் என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ட்ரைலர் வீடியோவில் ‘எனக்கு வாழப்பழமே போதும்’என்று சொல்லி அவர் வெளிப்படுத்திய மாடுலேஷன்  மகா மட்டம்.காட்சிக்கு காட்சி ‘சிகரெட்’, ‘தம்’ மென்று காட்சியளிப்பது குறித்து நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டதுக்கு ‘90 எம்.எல்’போடாமலே பொளந்து கட்டிவிட்டார்.

oviya

ஏங்க,இந்தப்பட்டதோட கதை அல்ட்ரா மாடர்ன் கேர்ள் பத்தின கதை.தவிர ஆணுக்கு பெண் சமம்னு சொல்லுறதுதான் படத்தோட மொத்தக்கதையும்.இந்தக் கதைக்கு இழுத்துப் போர்த்திக்கிட்டா நடிப்பாங்க? கொஞ்சம் கிளாமரா நடிச்சிருக்கேன்.அது குத்தமா! சரி,தெரியாமத்தான் கேக்குறேன்.இதே மாதிரி எத்தனை ஹீரோ சினிமாவில் சிகரெட் பிடிக்கிறது,தண்ணியடிக்கிற மாதிரியெல்லாம் காட்சி வந்திருக்கு; அதெல்லாம் கேக்க மாட்டிங்க.நான் பண்ணினால் மாட்டும் கேக்குறீங்களே இது நியாயமா என்கிறார்.போகிற போக்கில் இன்னொரு தகவலையும் சொன்னார் நிஜத்திலும் அவருக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் உண்டாம்.உடல்நிலை கருதி கொஞ்ச நாளைக்கு கட்டுப்பாடா இருப்போம்னு அவரே புத்தாண்டு சபதம் போல் உறுதிமொழி எடுத்திருக்கிறாராம்!

அவர் யார் என்று பெயர் சொல்லவில்லையே தவிர,சமீபகாலமா திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கிற மாதிரி போஸ்டர் போட்டு பஞ்சாயத்து ஆனது அஜித் -விஜய் படங்களுக்குதான். அதைத்தான் அவர் மறைமுகமாக குறிப்பிடுகிறார்.

ஓவியா ஆர்மி முன்ன மாதிரி ஆக்டிவா இருந்திருந்தா இப்படியெல்லாம் ஒரு அநியாயம் நடக்க விட்டு பார்த்திக்கிட்டிருப்பாங்களா?பாவம் ஓவியா!