அஜித் ரசிகர்களை முட்டாள் என்று திட்டிய சிபி சத்யா ராஜ்

 

அஜித் ரசிகர்களை முட்டாள் என்று திட்டிய சிபி சத்யா ராஜ்

இந்த உலகத்தில் நடக்கும் அனைத்தும் பிரச்சனைகளாகும் ஒரு தீர்வு கிடைத்துவிடும் ஆனால் அஜித், விஜய் ரசிகர்கள் நடுவில் நடக்கும் பிரச்சனைக்கு மற்றும் தீர்வே இல்லை.

இந்த உலகத்தில் நடக்கும் அனைத்தும் பிரச்சனைகளாகும் ஒரு தீர்வு கிடைத்துவிடும் ஆனால் அஜித், விஜய் ரசிகர்கள் நடுவில் நடக்கும் பிரச்சனைக்கு மற்றும் தீர்வே இல்லை. என்ன தான் அஜித்-விஜய் நண்பர்களாகப் பழகி வந்தாலும் இவரது ரசிகர்கள் மற்றும் எலியும், பூனையுமாகவே உள்ளனர். காரணம் இருக்கிறதோ, இல்லையோ அடிக்கடி இவரது ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக் கொள்கின்றனர். 

அந்த வகையில் இன்று காலை முதல் அஜித் ரசிகர்கள், #RIPActorVijay என்ற ஹாஷ் டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த ஹாஸ் டாக் இந்தியா அளவில் ட்ரெண்டாகியுள்ளது. 

இந்த நிலையில் தற்போது அதை எதிர்த்து விஜய் ரசிகர்கள் #LongLiveVIJAY என்ற ஹாஸ் டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இது குறித்து நடிகர் சிபி சத்யராஜ் ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

அதில், ‘சில முட்டாள்கள் எதிர்மறையான ஹாஸ் டக் உருவாக்கி ட்ரெண்ட் செய்வதைப் பார்க்கும் போது வெறுப்பாக இருக்கிறது! இது ஒரு நபரை மட்டுமே வலிமையாக்குகிறது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.